tamilnadu

img

உ.பி.மாநிலத்தில் 12 பேர் பலி

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான கிளர்ச்சி

புதுதில்லி, டிச.21- உத்தரப்பிரதேச மாநிலத்தில், குடி யுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் 8 வயது சிறு வன் உட்பட 12 பேர் கொல்லப்பட்ட னர். உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல இடங்களில், வெள்ளிக்கிழமையன்று தொழுகை முடிந்தபின்னர், கிளர்ச்சியா ளர்கள் காவல்துறையினருடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்ததாகவும், கற் களை எறிந்தார்கள் என்றும், வாகனங்க ளுக்குத் தீ வைத்தார்கள் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

தொழுகைக்குப் பின்னர் லக்னோ மற் றும் அலிகார் அமைதியாக இருந்த அதே சம யத்தில், பெரோசாபாத், பதோகி, பாராய்ச், பரூக்காபாத், கோரக்பூர், சம்பல் உட்பட சுமார் 20 மாவட்டங்களில் நடைபெற்றன. போராட்டக்காரர்கள் மீது காவல்துறை யினர் தாக்குதல் நடத்தினர். சில இடங்க ளில் துப்பாக்கிச் சூடும் நடைபெற்றது. இதில் மீரட் மாவட்டத்தில் நான்கு பேர், கான்பூ ரில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். வார ணாசியில் காவல்துறையினர் அடித்துத் துரத்திச் சென்ற சமயத்தில் ஏற்பட்ட நெரி சலில் சிறுவன் கொல்லப்பட்டான். பிஜ்னோர் என்னுமிடத்தில் இருவர் கொல்லப்பட்டனர் என்றும், சம்பல் மற்றும் பிரோசாபாத் ஆகிய இடங்களில் தலா ஒருவர் கொல்லப்பட்டார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கான்பூர் சரக காவல்துறை இன்ஸ்பெக் டர் ஜெனரல் மோகித் அகர்வால், மாவட் டத்தில் இறந்துள்ள இருவர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். முதல்வர் யோகி ஆதித்யநாத், லக்னோ விற்கு வெளியிலிருந்த நிகழ்ச்சிகள் அனைத் தையும் ரத்து செய்துவிட்டார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் பெரிய நக ரங்கள் அனைத்திலும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.         (ந.நி.)
 

;